தேவையான பொருட்கள்
- வெல்லம்
- தேங்காய்
- வேர்கடலை
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு கப் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின், வடி கட்டி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
1/4 கப் துருவிய தேங்காய், 1/4 கப் பொடியாக்கிய வேர்க்கடலை சேர்த்து இறுகும் வரை நன்கு கிளறவும்.
பின், ஒரு தட்டில் ஊற்றி பாதி அளவு ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
