தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- நாட்டுச் சர்க்கரை
- தேங்காய்
- முந்திரி
- நெய்
- ஏலக்காய் பொடி
செய்முறை
குக்கரில் ஒரு கப் கடலைப்பருப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரை வேக வைக்கவும்.
வேக வைத்துள்ள கடலைப்பருப்பு நன்கு ஆறிய பின் தண்ணீரை வடித்து விட்டு மசித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, 1/4 கப் முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
