ஃப்ரைடு இட்லி

தேவையான பொருட்கள்

  • இட்லி
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • இட்லி பொடி
  • பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

ஐந்து இட்லியை நீளமான சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின், வெட்டி எடுத்த இட்லி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த இட்லியுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் இட்லி பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post