புதினா-சிக்கன் சில்லி

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • புதினா
  • தனியா தூள்
  • இஞ்சி
  • பூண்டு
  • சோம்பு
  • சீரகம்
  • எலுமிச்சை
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி இலை
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் புதினா, 1/4 கப் கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் தனியா தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

250 கிராம் பொடியாக நறுக்கிய சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைத்து பின் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post