கேரட் பாசிப்பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • பாசிப்பருப்பு
  • நாட்டுச் சர்க்கரை
  • முந்திரி
  • ஏலக்காய் பொடி
  • நெய்
  • தேங்காய்

செய்முறை

முதலில், ஒரு கப் பாசிப்பருப்பை வேக வைத்து எடுக்கவும்.

கடாயில் ஒரு கப் துருவிய கேரட், ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து வதக்கவும்.

பின், வேக வைத்துள்ள பாசிப்பருப்பை தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும். ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 கப் பொடியாக்கிய முந்திரி சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

Previous Post Next Post