கோதுமை கார கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

  • கோதுமை
  • கேரட்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • பாசிப்பருப்பு
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமையை வறுத்து அரைக்கவும்.

ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 கப் துருவிய கேரட் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

ஆறிய‌‌ பின் இதனுடன், வறுத்து அரைத்து வைத்துள்ள கோதுமை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர், கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post