தேங்காய் அவல் உருண்டை

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • அவல்
  • சர்க்கரை
  • ஏலக்காய் பொடி
  • நெய்

செய்முறை

ஒரு கடாயில், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை உருகும் வரை சூடாக்கவும்.

1/2 கப் அவல் தண்ணீரில் நனைத்து சேர்த்து இதனுடன் 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.

ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

Previous Post Next Post