எள் உருண்டை

தேவையான பொருட்கள்

  • எள்
  • பொட்டுக்கடலை
  • வெல்லம்

செய்முறை

ஒரு கடாயில் ஒரு கப் எள் மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து வறுக்கவும். பின், எள் இரண்டாக உடையும் படி அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பின், அரைத்து வைத்துள்ள எள்ளுடன் பாகை சேர்த்து சிறிய உருண்டைகளாக பிரிக்கவும்.

Previous Post Next Post