தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- புதினா
- கொத்தமல்லி இலை
- தனியா தூள்
- பச்சை மிளகாய்
- கடலை மாவு
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் புதினா, 1/4 கப் கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் தனியா தூள், இரண்டு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின், 200 கிராம் உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான மெல்லிசான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை புதினா மசாலாவில் போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
