ஸ்வீட் ரவா இட்லி

தேவையான பொருட்கள்

  • ரவை
  • அவல்
  • வெல்லம்
  • கேரட்
  • நெய்
  • முந்திரி

செய்முறை

கடாயில், 25 மில்லி நெய், 200 கிராம் ரவை சேர்த்து வறுக்கவும். இதனுடன், 1/4 கப் துருவிய கேரட், 1/4 கப் அவல், 1/4 கப் பொடியாக நறுக்கிய முந்திரி சேர்த்து நன்கு வறுக்கவும்.

ஆறிய பின், இதனுடன் ஒரு கப் பொடியாக்கிய வெல்லம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்து பின் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post