தேவையான பொருட்கள்
- மாங்காய்
- மிளகாய் தூள்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- வெந்தயம்
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
ஒரு கிலோ மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள மாங்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஐந்து ஸ்பூன் உப்பு, இரண்டுக்கும் காஷ்மீரி மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து அரைத்து மாங்காயுடன் சேர்க்கவும்.
ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் சேர்த்து இரண்டு நாட்கள் வைக்கவும்.
