பூண்டு ஊறுகாய்

தேவையான பொருட்கள்

  • பூண்டு
  • மிளகாய் தூள்
  • புளி
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • வெந்தயம்
  • கடுகு
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை

செய்முறை

ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் மற்றும் ஒரு கப் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின், வதக்கி வைத்துள்ள பூண்டு முழுமையாக அரைந்து விடாமல் பாதி அளவு மட்டும் அரைக்கவும்.

ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தயம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள பூண்டு, ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து கலந்து விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு இறுகும் வரை கிளறி விடவும்.

Previous Post Next Post