தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- உப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
செய்முறை
இரண்டு கத்தரிக்காயை தீயில் நன்றாக சுட்டு எடுத்து தோல் நீக்கவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், சுட்டு தோல் நீக்கிய கத்தரிக்காய், ஒரு தக்காளி, சிறிதளவு புளி, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
