தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்
- மைதா
- பேக்கிங் பவுடர்
- சர்க்கரை
- கொக்கோ பவுடர்
- பால்
- சாக்கோ சிப்ஸ்
- எண்ணெய்
செய்முறை
இரண்டு வாழைப்பழம், 1/2 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் பால் சேர்த்து அரைக்கவும்.
இதனுடன் ஒரு கப் மைதா, ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர், நான்கு ஸ்பூன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் தடவி நான்கு புறமும் பட்டர் சீட் வைத்து அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி விசில் போடாமல் 30 நிமிடம் வேக வைக்கவும்.
