வாழைப்பூ போண்டா

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ
  • மைதா
  • அரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • சோம்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் மைதா, 1/4 கப் அரிசி மாவு, 1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post