தேவையான பொருட்கள்
- ஆட்டுக்குடல்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- கறி மசாலா தூள்
- மிளகாய்த்தூள்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- மிளகுத்தூள்
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு குக்கரில் 200 கிராம் பொடியாக வெட்டியா ஆட்டுக்குடலை நன்கு சுத்தம் செய்துவிட்டு சேர்த்து இதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை சமைக்கவும்.
ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள குடலை தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்க்கவும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
