தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- பொட்டுக்கடலை மாவு
- நல்லெண்ணெய்
- எள்
- கேசரி பவுடர்
- எண்ணெய்
- உப்பு
- மிளகாய் தூள்
செய்முறை
ஒரு கப் அரிசி மாவு, ஒரு கப் பொட்டுக்கடலை மாவு, 1/2 ஸ்பூன் கேசரி பவுடர், 1 ஸ்பூன் எள், 2 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விடவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவை விட இளகிய பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
