தேவையான பொருட்கள்
- பச்சரிசி
- உளுந்து பருப்பு
- நாட்டுச் சர்க்கரை
- அவல்
- வெந்தயம்
- உப்பு
- தேங்காய்
- நெய்
செய்முறை
200 கிராம் பச்சரிசி, 25 கிராம் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் 25 கிராம் அவல், 200 கிராம் நாட்டுச் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து நான்கு மணி நேரம் வைக்கவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவுடன் 50 கிராம் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து பணியார கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
