அன்னாசி அல்வா

தேவையான பொருட்கள்

  • அன்னாசி பழம்
  • மைதா
  • சர்க்கரை
  • நெய்
  • கேசரி பவுடர்
  • எண்ணெய்
  • முந்திரி
  • பால்

செய்முறை

ஒரு அன்னாசி பழத்தை தோலை சீவி துருவி எடுக்கவும்.

கடாயில், துருவி வைத்துள்ள அன்னாசி, 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

ஒரு கப் பால் மற்றும் நான்கு ஸ்பூன் மைதா மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

பின், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து இறுகி வரும் வரை கிளறவும். இடையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் (25 மில்லி) மற்றும் எண்ணெய் (25 மில்லி) சேர்க்கவும்.

இறுகிய உடன் 1/4 கப் முந்திரியை நெய்யில் வருது சேர்க்கவும்.

Previous Post Next Post