குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள்

  • குடைமிளகாய்
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post