தேவையான பொருட்கள்
- பாறை மீன்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- நல்லெண்ணெய்
- மஞ்சள் தூள்
- மீன் சில்லி பொடி
- மிளகாய் தூள்
- சோம்பு
- இஞ்சி
- பூண்டு
- தேங்காய்
- தக்காளி
- உப்பு
- கடுகு
- வெந்தயம்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் துருவிய தேங்காய், சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மீன் சில்லி பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் பாறை மீனை சிறிய துண்டுகளாக வெட்டி முட்களை நீக்கி இதனுடன் சேர்க்கவும். மேலும், அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
