தேவையான பொருட்கள்
- கேழ்வரகு
- கோதுமை
- கம்பு
- தினை
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
- உப்பு
- இட்லி பொடி
செய்முறை
ஒரு கப் கோதுமை, ஒரு கப் கேழ்வரகு, ஒரு கப் கம்பு, ஒரு கப் தினை, ஒரு கப் உளுந்து பருப்பு, 2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
தயார் செய்த மாவை நான்கு மணி நேரம் வைத்து பின்னர் தேவையான அளவு உப்பு, இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும், பொடியாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து மேலே இட்லி பொடியை தூவி விடவும்.
