வெஜ் கட்லெட்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பீட்ரூட்
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • கறி மசாலா தூள்
  • பச்சை மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • சோம்பு
  • மிளகாய் தூள்
  • கடலை மாவு
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும்.

மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன், 1/4 கப் துருவிய பீட்ரூட், 1/4 கப் துருவிய கேரட், 1/4 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், 1/4 கப் வேக வைத்த பச்சை பட்டாணி, ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைந்து வைத்துள்ள மசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post