தேவையான பொருட்கள்
- பட்டாணி
- தேங்காய்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- மஞ்சள் தூள்
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய், சிறிதளவு இஞ்சி, நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
200 கிராம் பட்டாணியை நான்கு மணி நேரம் ஊற வைத்து பின், குக்கரில் போட்டு 400 மில்லி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, இரண்டு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள பட்டாணியை தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கிளறி விடவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
