ஸ்வீட் இட்லி

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி
  • உளுந்து பருப்பு
  • வெந்தயம்
  • அவல்
  • தேங்காய்
  • வெல்லம்
  • பாசிப்பருப்பு
  • கேரட்

செய்முறை

ஒரு கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஐந்து மணி நேரங்கள் ஊற வைத்து அதனுடன் 1/4 கப் அவல் சேர்த்து நன்கு இறுக்கமாக அரைக்கவும்.

பின், மாவு புளித்தவுடன் ஒரு கப் பொடியாக்கிய வெல்லம், ஒரு கப் துருவிய கேரட், ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து கலந்துவிட்டு இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post