தேங்காய் பால் டீ


தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • டீத்தூள்
  • சர்க்கரை
  • ஏலக்காய்

செய்முறை

முதலில், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஏலக்காய் மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

பின், ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில், தேங்காய் பால் சேர்த்து கொதிக்க தொடங்கும் முன் தயார் செய்து வைத்துள்ள டீயில் கலந்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

Previous Post Next Post