தேவையான பொருட்கள்
- வெந்தயக்கீரை
- துவரம் பருப்பு
- தக்காளி
- தேங்காய்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- கொத்தமல்லி
- மஞ்சள் தூள்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை
ஒரு கப் துவரம் பருப்பு, இரண்டு கப் தண்ணீர், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு தக்காளி சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் வெந்தயக்கீரை, 1/4 கப் துருவிய தேங்காய், வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்க்கவும் இதனுடன் தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
