தேவையான பொருட்கள்
- முருங்கைக் கீரை
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- தேங்காய்
- கொத்தமல்லி
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- துவரம் பருப்பு
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- கடுகு
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு மணி நேரம் ஊற வைத்த துவரம் பருப்பு நான்கு ஸ்பூன், ஒரு தக்காளி, இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 கப் சின்ன வெங்காயம், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்த உடன், அரைத்து வைத்துள்ள மசாலா, இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் ஒரு கப் முருங்கைக் கீரை சேர்த்து கொதித்த உடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
