கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

  • கீரை
  • நல்லெண்ணெய்
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • தேங்காய்
  • மஞ்சள் தூள்
  • சீரகம்
  • உப்பு
  • கறிவேப்பிலை

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக, ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post