சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி
  • பாசிப்பருப்பு
  • வெல்லம்
  • நெய்
  • ஏலக்காய்
  • முந்திரி
  • உலர் திராட்சை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 50 கிராம் பாசிப்பருப்பு மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இதனுடன் இரண்டு மணி நேரம் ஊறவைத்த பச்சரிசி இரண்டு கப், மூன்று கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

நன்கு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைக்கவும். அரிசி 75% வெந்த பின் ஒரு கப் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

நெய்யில் வறுத்த 1/2 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை, தட்டிய மூன்று ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக 25 மில்லி நெய் சேர்க்கவும்.

Previous Post Next Post