முளைகட்டிய பயிறு தோசை

தேவையான பொருட்கள்

  • பச்சை பயிறு
  • தட்டைப்பயிறு
  • கருப்பு சுண்டல்
  • கொள்ளு பருப்பு
  • உளுந்து பருப்பு
  • அரிசி மாவு
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

1/2 கப் பச்சை பயிறு, 1/2 கப் தட்டைப்பயிறு, 1/2 கப் கொள்ளு பருப்பு, 1/2 கப் கருப்பு சுண்டல், 1/2 கப் உளுந்து பருப்பு சேர்த்து 5 மணி நேரங்கள் ஊற வைத்து பின் முளை கட்டி ஒரு நாள் வைக்கவும்.

பின், அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

அரைத்து வைத்துள்ள மாவுடன் 1/2 கப் அரிசி மாவு சேர்த்து நான்கு மணி நேரங்கள் வைக்கவும்.

ஒரு கடாயில், இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து கலந்து விடவும்.

பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post