தேவையான பொருட்கள்
- சேமியா
- ஜவ்வரிசி
- சர்க்கரை
- தேங்காய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
- நெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1/4 கப் ஜவ்வரிசி, 1/2 கப் சேமியா மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின், ஒரு கப் சர்க்கரை, 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இதனுடன் 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் இரண்டு ஏலக்காயை தட்டிச் சேர்க்கவும்.
