தேவையான பொருட்கள்
- சிக்கன்
- காய்ந்த மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- மஞ்சள் தூள்
- சீரகம்
- சோம்பு
- பட்டை
- இலவங்கம்
- கறிவேப்பிலை
- கசகசா
- நல்லெண்ணெய்
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், விதை நீக்கிய 50 கிராம் காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி சேர்த்து வதக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து அரைக்கவும்.
மற்றொரு கடாயில், 25 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பட்டை, இரண்டு இலவங்கம், பொடியாக நறுக்கிய இஞ்சி இரண்டு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு இரண்டு ஸ்பூன், பத்து சின்ன வெங்காயம், விதை நீக்கிய காய்ந்த மிளகாய் ஐந்து, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடியாக வெட்டிய 400 கிராம் சிக்கன், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். அடுப்பை மெதுவாக வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலா, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
