கருணைக்கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்

  • கருணைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பூண்டு
  • மஞ்சள் தூள்
  • புளி
  • கடுகு
  • சீரகம்
  • வெந்தயம்
  • சாம்பார் பொடி
  • மிளகாய் தூள்
  • தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

300 கிராம் கருணைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

1/2 கப் புளிக்கரைசல், 1/2 கப் தண்ணீர், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

ஒரு கப் துருவிய தேங்காயை அரைத்து சேர்க்கவும் இதனுடன் வேகவைத்த கருணைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post