முட்டை மிளகு வறுவல்


தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மிளகுத்தூள்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • சோம்பு
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், ஐந்து முட்டைகளை வேகவைத்து எடுக்கவும். வேக வைத்துள்ள முட்டை ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வேக வைத்துள்ள முட்டை, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post