தேவையான பொருட்கள்
- தேங்காய்
- சர்க்கரை
- பொட்டுக்கடலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
இதனுடன் நான்கு கப் துருவிய தேங்காய் சேர்த்து இறுகி வரும் வரை நன்கு கிளறவும்.
பின், ஒரு தட்டில் எண்ணெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பர்பியை அதன் மேல் ஊற்றி சமம் படுத்தவும் இறுதியாக மேலே பொட்டுக்கடலை தூவவும்.
