பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • கடலைப்பருப்பு
  • கடலை மாவு
  • பெரிய வெங்காயம்
  • சோம்பு
  • பெருங்காயத்தூள்
  • இஞ்சி
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

1/2 கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன், 1/4 கப் கடலை மாவு, 1/2 கப் துருவிய பீட்ரூட், 1/4 கப் பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post