தேவையான பொருட்கள்
- பனீர்
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- வேர்க்கடலை
- முந்திரி
- சீரக பொடி
- தனியா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- நெய்
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், பத்து முந்திரி, ஒரு கைப்பிடி வேர்க்கடலை, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கவும். பின், 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு ஆறிய பின் அரைக்கவும்.
அதே கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் சீரக பொடி, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும். பின்னர், ஒரு தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதனுடன், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கப் பொடியாக நறுக்கிய பனீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
