தேவையான பொருட்கள்
- பனீர்
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- முந்திரி
- வேர்க்கடலை
- சீரக பொடி
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மிளகுத்தூள்
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- கறி மசாலா தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- நெய்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய், பத்து முந்திரி, 20 கிராம் வேர்க்கடலை, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் சீரக பொடி, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன், ஒரு கப் பொடியாக நறுக்கிய பனீர், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
