தேவையான பொருட்கள்
- பனீர்
- சோள மாவு
- மைதா
- தனியா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- கறி மசாலா தூள்
- எலுமிச்சை சாறு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பொடியாக நறுக்கிய பனீர், இரண்டு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
