தேவையான பொருட்கள்
- ராகி
- உளுந்து பருப்பு
- ஜவ்வரிசி
- அவல்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் ராகி, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
இதனுடன் 1/4 கப் அவலை நனைத்து சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து மணி நேரம் வைக்கவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
