தேங்காய் பால் புட்டிங்

தேவையான பொருட்கள்

  • தேங்காய் பால்
  • சோள மாவு
  • சர்க்கரை
  • ஏலக்காய் பொடி

செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து சூடானவுடன், ஐந்து ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். மேலும் இதனுடன், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கண்டன்ஸ்டு மில்க் பதத்திற்கு வரும் வரை கிளறவும்.

இறுதியாக, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

இதனை ஒரு பவுலில் ஊற்றி நான்கு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின், ஒரு தட்டில் போட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


Previous Post Next Post