தேவையான பொருட்கள்
- ராகி
- வேர்க்கடலை
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை
ஒரு கப் ராகி மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பின், பாத்திரத்தில் ஒரு கப் பொடியாக்கிய வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
அரைத்து வைத்துள்ள மாவுடன் நான்கு ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விட்டு சர்க்கரை பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
