கேரட் புட்டிங்

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • ரவை
  • சோள மாவு
  • சர்க்கரை

செய்முறை

ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட், ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கேரட் சாறு மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின், கடாயில் 1/4 கப் ரவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில், வடித்து வைத்துள்ள கேரட் சாறு சேர்த்து சூடானவுடன் வறுத்த ரவை, இரண்டு ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும், மேலும் இதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கண்டன்ஸ்டு மில்க் பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறவும். தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆறிய பின், ஒரு பவுலில் ஊற்றி ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர், ஒரு தட்டில் போட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.


Previous Post Next Post