மில்க் புட்டிங்

தேவையான பொருட்கள்

  • பால்
  • பால் பவுடர்
  • சோள மாவு
  • சர்க்கரை
  • டார்க் சாக்லேட்

செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் பால் சேர்த்து பால் சூடானவுடன் ஐந்து ஸ்பூன் சோள மாவை 1/2 டம்ளர் பாலில் கரைத்து சேர்க்கவும்.

பின், 1/4 கப் பால் பவுடர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கண்டன்ஸ்டு மில்க் பதத்திற்கு வரும் வரை அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கிளறவும்.

ஒரு பவுலில் ஊற்றி நான்கு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

பின், ஒரு தட்டில் போட்டு அதன் மேல் துருவிய டார்க் சாக்லேட் தூவி சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.


Previous Post Next Post