தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- பெரிய வெங்காயம்
- கடுகு
- கடலைப்பருப்பு
- பச்சை மிளகாய்
- தேங்காய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் ராகி மாவு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
கடாயில், 25 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள ராகி மாவை நன்கு பொடித்து சேர்க்கவும். மேலும் இதனுடன், 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
