தேவையான பொருட்கள்
- அவல்
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- பச்சை மிளகாய்
- தேங்காய்
- கேரட்
- கடலைப்பருப்பு
- கடுகு
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 25 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், 100 கிராம் அவலை தண்ணீரில் நனைத்து சேர்க்கவும். மேலும், 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் துருவிய கேரட் சிறிதளவு சேர்த்து இறக்கவும்.
