தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- நாட்டுச் சர்க்கரை
- நெய்
- ஏலக்காய் பொடி
- தேங்காய்
- உப்பு
செய்முறை
ஒரு கப் ராகி மாவு, 1/2 கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், வேக வைத்துள்ள ராகி மாவை நன்கு பொடித்து விட்டு அதனுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.
