தேவையான பொருட்கள்
- பன்னீர் ரோஜா
- டீத்தூள்
- தேன்
- பால்
- நாட்டுச் சர்க்கரை
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் டீத்தூள், ஒரு கைப்பிடி பன்னீர் ரோஜா இதழ்கள், தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், 1/2 டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து கலந்து விடவும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து விடும்.
