தேவையான பொருட்கள்
- டீத்தூள்
- ஏலக்காய்
- சர்க்கரை
- லவங்கம்
- பட்டை
- சோம்பு
- சுக்குப்பொடி
- உலர்ந்த பன்னீர் ரோஜா
- பால்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் டீத்தூள், இரண்டு ஏலக்காய், 1/4 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு பட்டை, இரண்டு லவங்கம், 1/4 ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிதளவு உலர்ந்த பன்னீர் ரோஜா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், 1/2 டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக, வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
